நகரத்தார் மலரில் வெளிவந்த பதிவு - நம்ம வீட்டு கல்யாணம் !!


நம்ம வீட்டு கல்யாணத்தில் என்னவெல்லாம் இருக்கும்? பொண்ணு இருக்கும், மாப்பிள்ளை இருக்கும், இசைபடிமானம் இருக்கும், அப்புறம் இலை முழுக்க விதவிதமான பலகாரங்கள் இருக்கும்.கடைசியா குறைகளுடன் முறை சட்டிகள் இருக்கும். இப்பிடியான பிம்பம் தான் இப்ப நம்ம நிறைய பேருக்கு இருக்கு.

அந்த காலத்தில் ஐயாக்கள் கப்பலில் கொண்டுவிக்க(பிசினஸிற்கு) பல தேசங்கள் போனார்கள். வீட்ல பொம்பிளைகளுக்கு பொருளாதார மேன்மைகாக செய்ய பட்டது தான் இந்த முறைதலைகள் சட்டி, சம்படம் கொடுக்கல் வாங்கல் எல்லாம். வெறும் பெருமைகளுக்காகவும்,சந்தோஷத்தை இரட்டிப்பதற்காகவும் செய்ய பட்டது தான். ஆரம்பிக்கும் நாளிலே கசப்பை பிள்ளைகளின் வாழ்வில் விதைப்பதற்காக அல்ல என்பதையெல்லாம் இப்போ இருக்க நம்ம ஜெனரேஷனிற்கு நாம சொல்லிருக்கோமா?

ஏன் சொல்லாம ..எல்லா நல்லா சொல்லி தான் வச்சுருக்கோம்கிறீங்களா..ஆமா சொல்லிருக்கோம், நம்ம தோதுக்கு தக்கபடி தான் சொல்லிருக்கோம்.

நம்மளில் எத்தனை பேரு இப்ப பிள்ளைகளை முதலில் விசேஷங்களுக்கு, படைப்பு பள்ளயங்களுக்கு கூட்டிட்டு வர்றோம்..சித்தப்பாவையும் அத்தையையும் வீட்டு விசேஷதன்னிக்கு காலையிலே விஐபி மாதிரி பார்த்து தான் நம்ம பிள்ளங்க ஹலோ சொல்லுது. நம்ம பிள்ளங்களுக்கு பட்டுபாவடை சட்டை போடுறதும், பாவடை தாவணி கட்டுறதும், வேஷ்டி கட்டுறதும் பட்டிகாட்டு தனமா போச்சு. வெளுத்து எடுக்கிற வெயிலில் நம்ம ஊரில் பிள்ளங்க கேதரிங் சுரிதாரும் , லெக்கிங்ஸ் போட்டுகிட்டு,பயலுக டைட் ஜீன்ஸ், டக் இன் ஷர்ட்ஸும் போட்டுகிட்டு மூச்சு விட சிரம்ப படுறதை பார்க்கிறப்போ ரொம்ப பரிதாபமா இருக்கு

ம் சரியா சொன்னீங்க அதுக்கு தான் பிள்ளைக ஊருகளுக்கே வர மாட்டேங்குது..நீங்களே போயிட்டுவாங்கம்மா சொல்லிடுதுகநீங்க சொல்லுறது எனக்கு இங்க கேட்குது.
ஸோ.. இதுல நம்ம தப்பு ஓண்ணுமே இல்லையா??? கொஞ்சம் யோசிச்சா நமக்கே அது புரியும். நமக்கு இருக்க வேலை டென்சனில் நம்மளலா ஸ்கூலுக்கு போய் முன்னாடியே லீவு சொல்லுறதும் கஷ்டம், லீவை போட்டுட்டு ஸ்கூல் ப்ரின்சிபல்கிட்ட மென்னு முழுங்கிறதும் கஷ்டம் ஸோ..இது எல்லாம் என்னதுக்குன்னு நம்ம மட்டும் விசேஷகங்களுக்கு வந்திட்டு போயிடுறோம்.”

சும்மா சும்மா ஸ்கூலில் லீவு போட்டா போர்ஷன் போயிடும்..யாரு படிக்கிறது..அதுவும் இல்லாம பிள்ளங்களுக்கு அந்த ஊரும் அட்ஜஸ்ட் ஆக மாட்டேங்குது, தண்ணீ ஒத்துக்கலை..ப்ராக்டீகல் டிஃபிகல்டீஸ் எவ்வளவு இருக்கு தெரியுமா?”

ஏன் தெரியாமே.. நல்லா தெரியும்.. ஆனா நீங்க தான் ஒன்றை மறந்துட்டீங்க..நம்ம வேர்கள் இப்ப வரைக்கு இந்த ஊர்களில் தான் இருக்கு..கான்டாக்காரனை வச்சி ஊருண்ணி தண்ணியை காசாணி அண்டாவில் ஊத்தி வைத்து நாம குடிச்சப்ப நாம நல்லாதானே இருந்தோம். இப்ப நம்ம பிள்ளங்க இருக்கும் இடங்களில் இயற்கை உணவு முறை பத்தி வொர்க்ஷாப் அட்டென் பண்ணிட்டு சாயங்காலம் வரும் போது கம்பிளிமெண்டா கொடுக்கிற காப்பர் வாட்டர் பாட்டிலில் தண்ணீர் குடிக்கிறது பெருமையா இருக்கு,  நகரத்தார்னு நம்மள கூப்பிட்டு பரிவட்டம் கட்டும் போது பூரிப்பா இருக்கு..அடுத்த வீட்டு காரங்க நீங்க காரைக்குடியா? அய்யோ அங்க எவ்வளவு பெரிய்ய வீடெல்லாம் இருக்கு,ஆஸம் ஃபுட்னு சொல்லும் போது சந்தோஷமா இருக்கு.. ஆனா அந்த பாரம்பரியத்தை நம்ம வசதிக்காக நாம நம்ம பிள்ளங்களுக்கு ஒன்னு முழுசா சொல்லுறது இல்ல.. இல்லாட்டி மொத்தமா சொல்லுறதே இல்ல

நம்ம வீட்டு கல்யாணம்னு சொல்லிட்டு காசாணி அண்டாவை பத்தியும், காப்பார் வாட்டர் பாட்டிலை பத்தி சொல்லிட்டு இருக்கீங்களே..அதெல்லாம் எங்க வந்திச்சி கல்யாணத்திலே?”

ம்..நீங்க சொல்லுறது கரெக்ட் தான்.. நம்ம பிள்ளங்களை தவிர்க்க கூடாதா இடங்களில் தவிர்த்ததினால் வந்த விளைவு தான் இப்ப நம்ம வீடுகளுக்கு கல்யாணமே வர மாட்டேங்குது. நம்ம பிள்ளங்க பெட்ரோமாஸ் லைட்டே வேணும் கேட்குதுங்க நாம தீப்பந்தம் கூட இல்லாமே இருட்டுகுள்ளே இருக்கோம்
நல்ல படிச்ச பிள்ளங்க அவங்களுக்கு ஈக்குவலா படிச்ச , நல்ல வேலையில் இருக்கிற, வீடு வாசல்னு செட்டில் ஆகியிருக்கிற, நல்ல கேரக்டரோட இருக்க லைஃப் பார்ட்னர் கிடைக்கணும் நினைக்கிறது அவ்வளவு பெரிய்ய தப்பா? என்ன சொல்லுறீங்க?”
அது சரி..நல்லா படிச்ச பிள்ளங்க நல்லா படிச்ச மாப்பிள்ளையை / பெண்ணை எதிர்பார்க்கிறது தப்பே இல்லை..ஆனா..இப்பெல்லாம் நம்ம பொண்ணுங்க அது மட்டுமா எதிர்பார்கிறாங்க? நல்ல சம்பளம் வாங்கணும் ,அதுவும் பொண்ணு வேலைக்கு போயி ஒரு முப்பதாயிரம் சம்பளம் வாங்கிச்சோபார்க்கிற மாப்பிள்ளை கண்டிப்பா ஐடியிலே இருக்கணும்,அறுபதாயிரமாவது சம்பளம் வாங்கணும். மாப்பிள்ளைக்கு 2 இல்லாட்டி 3 வயசு தான் கூட இருக்கணும்.. வீடு இருக்கணும், காரு இருக்கணும். அப்பப்பா.. இந்த எக்ஸ்பெக்டேஷன்னாலே நம்ம மாப்பிள்ளைங்க நிறைய பேர் தெறிச்சி ஓடிகிட்டு இருக்காங்க, சில பேரு அஞ்சா நெஞ்சங்களா 35 வயதை கடந்தும் ஓட வேண்டிய கட்டாயத்தில் இருக்காங்க, ரொம்ப சில பேர் கல்யாணம் முடிச்சிருறாங்க, அதுல சில பேர் டைவர்ஸ் வாங்கி மறுபடியும் இந்த மேரேஜ் ரேஸ்ல ரிஜாயின் வேற பண்ணிடுறாங்க..”

அதுக்குன்னு படிப்பு பார்க்காமே, பணத்தை பார்க்காமே  அதுக வாழ்க்கை தேவையானதை பத்தி யோசிக்காமே கல்யாணத்தை பண்ண முடியுமா? இப்பெல்லாம் சென்னை, பெங்களூர், புனே மாதிரியான பெரிய ஊருலே சம்பளம் இல்லாட்டி அவ்வளவு ஈஸியா வாழ முடியுமா?”

ஏன் முடியாதா? உங்க பிள்ளங்க வாங்குற சம்பளமோ அல்லது உங்க பிள்ளங்க எதிர் பார்க்கிற சம்பளத்தில் பாதியை தான் நீங்க இப்ப சம்பளமா வாங்கி கொண்டு இருப்பீங்க, நீங்க வாழலையா? உங்க வாழ்க்கை கஷ்ட ஜீவனத்தில் ஓடுகிறதா?”

ஆமா நாங்க தான் இழுத்துக்க பறிச்சுக்கன்னு வாழ்ந்தோம், அதுகளும் அப்பிடியே இருக்கணுமா?அதுக முன்னேற கூடாதா?நல்லா வீடு வாசல்னு செட்டில் ஆக கூடாதா?”

ம்..அது பாயிண்ட்..ஆகா நாம எட்டமுடியாததை எல்லாம் நம்ம பிள்ளங்க தலையில் எதிர்பார்ப்பா ஏற்றி வச்சி நாம் அவங்களை வளைத்துவிடுகிறோம்.. நாம தான் பெரியப்பாகளையும், சித்தப்பாக்களையும் சில நேரத்தில் மட்டும் இன்ட்ரெடுயூஸ் பண்ணி, அய்யாக்கள் வீட்டாரை பார்த்து அந்நியமா சிரிக்கவும்,பங்காளிகளை பார்த்து தலையை அசைக்கவும் தானே சொல்லி கொடுத்திருக்கோம். அதனால நம்ம பையன்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு பொண்ணு எங்கம்மா மாதிரி இருக்கணும், நல்லா சமைக்கனும்,அழகுல எங்கக்கா/ தங்கச்சி மாதிரி இருக்கணும்ங்கறது தான். பொண்ணுங்களின் அதிகபட்ச எதிர்பார்ப்பு எங்கப்பா மாதிரி / எங்கண்ணன் மாதிரி/ என் குடும்பத்தை அவங்க குடும்பமா அக்செப்ட் பண்ணிக்கிறவங்க மாதிரி இருக்கணும்கிறது தான்..”

ஆம்மாமா.. முக்கா கிலோ குணத்துக்கு மூணு மாசத்துக்கு முதல்ல எங்கயாவது வீடு ஒத்திக்கு கிடைக்குதான்னு பாருங்க அப்புறம் பேசலாம் இதையெல்லாம்..”

சரி உங்க வழிக்கே வருவோம் 25 ஆயிரம் சம்பாதிக்கும் உங்க மகளைவிட ரெண்டே வயசு கூட உள்ள பையன் எப்பிடி 60 ஆயிரம் சம்பாதிக்க முடியும்..ஒரு லாஜிக் வேண்டாம் ?!! அவன் படிச்ச காலேஜில் கம்பெஸ் இல்லாமல் இருந்திருக்கலாம், கஷ்டபட்டு வேலையில் சேர ஆறேழு மாதம் பிடித்திருக்கலாம் எப்பிடி பார்த்தாலும் உங்க மகளை விட 10 ஆயிரம் கூட சம்பளம் வாங்குபவர்கள் சராசரியாக இருப்பார்கள். ஆகா நாம எப்பிடியிருந்தாலும் பரவாயில்லை ஆனா நாம எதிர்பார்கிறது மட்டும் அப்பாடக்கர் / அழகுசுந்தரியை தான். இன்றைய தேதியில் நிரந்திரம் இல்லாத துறை ஐடி மட்டும் தான்..இன்னிக்கு வேலை இருக்கும்..அடுத்த நாள் ஜோலி முடிஞ்சிருச்சி சொல்ல ஆளு கூட வரமாட்டாங்க வேலை பார்க்கும் கம்ப்யூட்டரில் பிங்க் ஸ்லிப் தான் இருக்கும், இந்த துறையில் இருப்பவர்களுக்கு லேபர் லா பாதுகாப்பு கிடையாது. தமிழ்நாட்டில் மட்டும் இந்த துறை லேபர் லா பாதுகாப்புக்குள் பெரிய போராட்டதிற்கு பின் வந்துள்ளது. ஐடி இந்தியாவில் பரவ காரணமே இது தான். எங்க நாடு முழுக்க லேபர் லாவிற்கு கீழே கொண்டு வந்திருவாங்களோன்னு பயந்து இப்பவே அடுத்த பயமுறுத்தலை ஆரம்பிச்சிருக்காங்க நம்ம ஐடி காரங்க , அது ஆட்டமேசன் , நாலு ஆளு பார்க்கிற வேலையை மெஷின் பார்க்கும்..அப்ப அந்த நாலு ஆளுக்கு ஜோலி போகும்..ஆக வேகவேகமா ஐடியில் நம்ம பிள்ளங்களை வேலைக்கு சேர்த்து, அவர்கள் வாழ்க்கையில் நிரந்திரயின்மையை உண்டுபண்ணி கொண்டிருக்கிறோம். ஐடியில் இருக்க பிள்ளங்க ஏற்கனவே ப்ரெர்ல தான் இருக்காங்க, இன்னும் நம்மளால ஆனாதா கல்யாண எக்ஸ்பெக்டேஷன்கிற பேரில் நாம் கொஞ்சம் ப்ரெரை ஏத்திகிட்டு இருக்கோம். இதையெல்லாம் விட பெரிய கொடுமை என்னான்னா.. ஐடியில் இருக்க பையனை ஆடிட்டர் படிச்ச பொண்ணு கல்யாணம் பண்ணாது. லாயரா , டாக்டரா இருக்க பையன்களை வேறு துறைகளில் இருக்கும் பெண்கள் கல்யாணம் செய்யிறதும் இல்லை , சில இடங்களில் பையன்களும் அதை விருப்புறதும் இல்லை.”
ஒரே வேலையிலே இருக்கிறவங்களுக்கு தான் அந்த வேலையோட கஷ்ட நஷ்டம் தெரியும், அதான்.. இது ஒரு தப்பா?”

ஹாஹாஹா.. நான் கஷ்டப்பட்ட நீ என்னை தேத்து, நீ கஷ்டப்பட்ட நான் உன்னை தேத்துறேன்கிறது போயி.. நான் கஷ்டபடுறேன்..நீயும் கஷ்டபடுங்கிற நிலைமை ஆகிடுச்சு..”

முதல்ல நம்ம பிள்ளங்ககிட்ட, அவங்களுக்கு எக்ஸ்பக்டேஷன் இருக்கும் பட்சத்தில் சொல்லி நாம் தெளிய வைக்க வேண்டிய நிதர்சனங்கள்.

·        நாங்க உனக்கு குக்கிங் பார்பி டாலை / சூப்பர்மேன் டாலையோ வாங்கி கொடுக்க போறதில்லை.
·        எப்பவும் மேக்கப் குறையாத அழகுடன் இருக்கும் பெண்ணையோ/அன்பே ஆரூயிரேன்னு உருகிக்கிட்டே இருக்க பையனையோ பார்க்க போறதில்லை.
·        பார்த்தவுடன் பட்டம்பூச்சி எல்லாம் பறக்காது,பார்க்கும் போதோ/ பேசும் போதோ ஈர்க்கும் ஏதோ ஒரு விஷயம் தான் உங்களை வாழ்க்கையின் அடுத்த கட்டத்திற்கு எடுத்து செல்லும்.
·        உன் சந்தோஷத்திலும் கஷ்ட நஷ்டத்திலும் கூட இருந்து உன் கூட தோள் கொடுக்க, உயிரும் ஜீவனும் உள்ள ஒரு தோழனை / தோழியை தான் தேடுகிறோம்னு சொல்லுங்க
காம்ப்ரமைஸ்க்கும் அட்ஜஸ்மெண்ட்க்கு நிறைய வித்தியாசம் இருக்கு.

·        காம்ப்ரமைஸ்ஒரு விஷயம் நமக்கு பிடிச்சிருந்தாலும் ,அதை ஒருவருக்காக கட்டாயத்திற்காக முழுதாக விட்டுகொடுப்பது இதை செய்யும் போது நிறைய கசப்பு சேர்ந்து போகும்.
·        அட்ஜஸ்மெண்ட்ஒரு விஷயம் நமக்கு பிடிக்காட்டியும், அதை ஒருவருக்காக சும்மா ஒப்புக்குசப்பாணியாக கூட இருந்து செய்வது, இதை செய்யும் போது இணக்கமான சூழ்நிலை உருவாகும்.இது கம்பெனியிலே புடிக்காத மேனேஜர்க்கு கீழே வேலை பார்க்கிற மாதிரி தான்.புடிக்காட்டியும் நம்ம வேலையை கரெக்ட்டா செஞ்சு குடுக்கனும்.

முகம் தெரியாத யாருகிட்டயோ விட்டுகொடுக்க தயராக இருக்கும் நம் பிள்ளைக,கூடவே இருக்க போகும் மனைவி/கணவனுக்காக விட்டு கொடுப்பது தப்பில்லைனு சொல்லி கொடுக்கணும்.

பேச சொல்ல எல்லாம் நல்லா தான் இருக்கும்.இப்பிடி சொல்லி கொடுத்தா கல்யாணத்துக்கு அப்புறம் எங்க பிள்ளைக எடுப்பு வேலை பார்க்கிற மாதிரி ஆயிருங்க

அது எப்பிடி ஆகும்?நம்ம மருமக நம்ம மகன் கைகுள்ளே இருக்கணும், ஆனா மாப்பிள்ளை, மகள் கைகுள்ளேதான் இருக்கணும். இது என்ன லாஜிக்.?? பிறந்து வந்த உறவுகளின் இடத்தை, வந்து கலக்கும் உறவுகளால் எப்பவும் ஈடு கட்ட முடியாது.ஏன்னா அது தண்டவாளம் மாதிரி தனித்தனியா தான் இருக்கும், ஆனா சேர்ந்து இருந்தா தான் உங்க பிள்ளையின் வண்டி ஓடும்.

இப்பிடி சின்ன சின்ன விட்டுகொடுத்தலின்மை, புரிதலின்மைனால தான் நம்ம வீடுகளில் கல்யாணங்கள் வருவதற்கு தாமதம் ஆகிறதே தவிர, வேறெதுவுமில்லை. கொஞ்சம் விட்டு கொடுத்தால் நிறைய சந்தோஷங்களுடன் நம் வீடுகள் கல்யாணங்களால் நிறையும்.
இது யாரையும் புண்படுத்த எழுதப்பட்டது அல்ல , தற்போது நடைமுறையில் நம் குடும்பங்களில் சில பெற்றோர்கள் , சில பிள்ளைகளின் புரிதலின்மையை களைவதற்காக எழுதப்பட்டது மட்டுமே.

No comments:

Post a Comment