சிறுகதை - மீனுகுட்டி


காலையிலேயே மீனு குட்டி, “மம்மி, இன்னிக்கு எனக்கு இட்லி பண்ணி வைக்கிறீங்களா?”
ம்ச்.. என்ன மீனு நீ..இட்லி மாவு முடிஞ்சிருச்சு.. இனி சன்டே தான் அரைக்கணும்..ப்ரெட் சாண்ட்விச் வித் ப்ரூட் சாலட் பண்ணி வச்சிருக்கேன் சாப்பிட்டுறு சரியா?” என்றாள் சிந்து , சிந்தாமல் கூப்பிட்டால் சிந்தாமணி. பிரபல மெக்கானிக்கல் நிறுவனத்தில் சீனியர் அக்கவுண்டண்ட்.
என் அழகிய மீனுகுட்டி முகம் சுருங்கி போனது.
சரி கீ எடுத்துக்கிட்டியா?” என்றாள் சிந்து ஆறு வயது மீனுவிடம்.
ம்…” என்றாள் வேண்டா வெறுப்பாக மீனு.
ஜாக்கிரதையா கதவை திறந்து உள்ளே வந்ததும், மறக்காமே சாவி எடுத்துடணும்..உள்பக்கமா பூட்டிக்கோ..யாரு தட்டினாலும் திறக்க கூடாது புரியுதா?” எக்ஸ்பிரஸ் இன்ஸ்ட்ரெக்ஷன் தந்து கொண்டு இருந்தாள் சிந்து.
ம்.. பஸ் வந்திரும் மம்மி, நாம போகலாமா?” என்றாள் மீனுகுட்டி பையை எல்லாம் எடுத்து கொண்டு.
அது என்ன கெட்ட பழக்கம்? தினமும் நான், இல்லாட்டி டாடி கொண்டு வந்து விட்டா தான் போவியா? அப்பார்ட்மெண்ட் வாசலிலே பஸ் வருது நீயா போக கூடாதா?”
ம்..ஓகே ம்ம்மிஎன்று முகத்தை தொங்க விட்டு கொண்டு அங்கிருந்து போனவளை பார்க்க மனசு வலித்ததுஇரு மீனுகுட்டி , டாடி வரேன்என்றபடி அவள் பைகளை வாங்கி கொண்டு அவளுடன் கீழே இறங்கினேன்.
படிகட்டில் இறங்கி கொண்டே மீனுகுட்டி, ஹோம்வொர்க் எல்லாம் எழுதிட்டீயாடாஎன்றேன் நான். நான் ஏ.எஸ்.பாய்,நீட்டினால் சுப்பையா அழகர்சாமி. சுத்தமான மதுரை பக்கத்து ஆளு. காரு கம்பெனியில் ஏ.ஜி.எம் வேலை. வேலைக்கு போக வரவே மூன்று மணி நேரமாகும்.
ஓ எஸ்..” என்று தன் அழகிய கண்களை விரித்து சிலிர்ப்பாய் சொன்னாள் மீனு.
டாடி..நான் ஒன்ணு கேட்பேன், வாங்கி தருவீங்களா?” –மீனு.
உன்கிட்ட தான் எல்லா டாய்ஸூம் இருக்கே.. இன்னும் என்ன வேணும்?” என்றேன் சற்றே கண்டிப்பு கலந்த சிரிப்புடன்.
இது டாய்ஸ் இல்ல டாடி..ம்..ஃபிஷ்..நிறைய ஃபிஷ்.. போட்ட கிளாஸ் டேங்க்.. வாங்கி தர்றீங்களா?” என்றாள் ஏக்கமாக என் பதிலை எதிர்பார்த்து.
ஆமா நீ எங்க நிறைய ஃபிஷ் பார்த்தே? அதுக்கு எல்லாம் கரெக்டா ஃபீடு பண்ணணும்டா..இல்லாட்டி அது செத்து போயிடும்என்றேன் நிதானமாக.
நான் பார்த்துக்கிறேன் டாடி..ப்ளீஸ்..” என்றாள் மறுபடியும்.அதற்குள் நாங்கள் பஸ் இருந்த இடத்திற்கு வந்திருந்தோம்.
சரி ஈவினிங் பேசலாம்.. இப்ப நீ ஸ்கூலுக்கு போயிட்டு வா.. ஓகே..பைஎன்று வழியனுப்பிவிட்டு வீடு வந்தேன். அரைமனசாய் சென்றாள் மீனு.
ஏன் சிந்து?..கொஞ்சம் அவளை நல்லா கவனிச்சுகிட்டாதான் என்ன?ரொம்ப ஏங்கி போற மாதிரி இருக்கு..ஷி ஈஸ் ஜஸ்ட் சிக்ஸ்..அவளே எப்பிடி அவளை பார்த்துக்க முடியும்?” என்றேன் மெதுவாக.
அப்ப நீங்க பார்த்துக்கோங்க, தினமும் சமைச்சு, வீட்டு வேலை எல்லாம் செஞ்சு தான் நானும் ஆபீஸ் போறேன்..அவ பிறக்க நாம ட்ரீட்மெண்ட் எடுத்ததுக்காக பட்ட கடனை அடைக்க தான் நானும் வேலைக்கே போறேன்என்றாள் சிந்து வேகமாக.
புரியுது சிந்து..ஆனா மீனுகுட்டி பிறக்காமே எவ்வளவு கஷ்டபட்டோம்..எத்தனை ட்ரீட்மெண்ட்..எவ்வளவு பெயின்..வரமா தானே அவ நமக்கு வந்து பிறந்தா.. அவளை நாம சரியா பார்த்துக்கலியோன்னு எனக்கு தோணுது
ம்ச்.. ப்ளீஸ் கிளம்புற நேரத்திலே சென்டிமெண்ட் ஸாங் பாடாதீங்க..சாயங்காலம் பேசிக்கலாம்..” என்று தானும் கிளம்பி என்னையும் கிளப்பி பேச்சுக்கு முற்றுபுள்ளி வைத்துவிட்டு அவள் ஸ்கூட்டியில் பறந்து சென்றாள்.நானும் கிளம்பினேன்.
மாலை, மீனு கதவை திறந்து உள்ளே வந்து கதவை ஆட்டோ லாக் போட்டுவிட்டு, பைகளை வைத்து விட்டு,ஷூகளை கழற்றிவிட்டு, கைகளை எக்கி எக்கி கிச்சன் ஸிங்கில் கழுவி விட்டு ஃப்ரிட்ஜை திறந்தாள். ஒரு பேஸ்ட்ரி கேக் இருந்தது. அதை எடுத்து சாப்பிட்டாள் லேசாக புளித்தது..பசி.. சாப்பிட்டு முடித்து ப்ளாஸ்கில் இருந்த பாலை குடித்துவிட்டு டிவியை போட்டு கார்ட்டூன் சேனலை பார்க்க ஆரம்பித்தாள். மறுபடியும் பசித்தது, டேபிளில் எதுவும் இல்லை..மணியை பார்த்தாள். சிந்து வர இன்னும் நேரமாகும். சுற்றும் முற்றும் பார்த்தாள் ஒரு கறுத்த வாழைப்பழம் இருந்தது அதை சாப்பிட்டாள். அப்புறம் அவளுக்கு தூக்கம் வருவது போல இருக்கவும் படுத்து கொண்டாள்.
சிந்து வந்த போது மணி எட்டை தொட பத்து நிமிடம் இருந்தது , வந்ததும் வராததுமாக நேராக கிச்சனுக்குள் நுழைந்து உப்புமாவையும் சட்னியும் செய்துவிட்டு வந்து மீனுவை எழுப்பினாள்.
மீனு..எழுந்திரிடா..கொஞ்சம் சாப்பிட்டு படுத்துக்கோ குட்டி”.
மீனுவிடம் சத்தமில்லை. “ம்ச்..மம்மிக்கு டயர்டா இருக்குடா..ப்ளீஸ் எழுந்திருச்சுகோடாசிந்து சொல்லிக் கொண்டிருக்கும் போது நான் வீட்டிற்குள் நுழைந்தேன்.
என்ன சிந்து அதற்குள் மீனு தூங்கிட்டாளா?” என்றேன்.
ம்..நான் வரும் போதே தூங்கிட்டு தான் இருந்தா..சரி டின்னரை பண்ணிட்டு எழுப்பலாம் என்று பார்த்தேன்..எழுந்திருக்கவே மாட்டேன்கிறாஎன்றவள்ம்ச்..மீனு எழுந்திரி..மம்மிக்கு கோவம் வந்திடும்.. எழுந்து சாப்பிட்டு தூங்கு.” என்றாள் உரக்க.
மீனுவிடம் சத்தமில்லை..சற்று கலவரமாக சிந்துமீனு..மீனு எழுந்திரி..இங்க பாரு மீனுகுட்டிஎன்னங்க இங்க வாங்களேன்..மீனு எழுந்திரிக்கவே மாட்டேன்கிறாஎன்று அலறினாள்.
பதறிய வந்த நான் மீனுவை பார்த்த்தேன்,மூச்சு ஓடுவது தெரிந்தது. அள்ளி கொண்டு இருவரும் எங்க ஏரியாவில் இருந்த பெரிய ஹாஸ்பிடலுக்கு ஓடினோம்.
டாக்டர்கள் பார்த்து ஃபுட் பாஸ்சன் ஆகியிருப்பதை கண்டுபிடித்து, மீனுவின் மயக்கத்தை தெளிய வைத்தனர்.
ஹாய் மீனு..இப்ப எப்பிடி இருக்கே?” என்றார் டாக்டர்.
ம்..எனக்கு என்ன?” என்றாள் மிரண்ட கண்களுடன்.
உனக்கு ஒண்ணுமில்லையே.. நீ நல்லா தான் இருக்கே?..ஆமா ஈவினிங் என்ன சாப்பிட்டே?”
கேக்.. மில்க்.. பனானா.. ஏன் கேட்குறீங்க?”
அய்யோ அந்த கேக்கையா சாப்பிட்டே? என்று பதறினாள் சிந்து. டாக்டர் அவளை அமைதிபடுத்திவிட்டு.
இனிமே சாப்பிடுறதுக்கு முன்னாடி அம்மாகிட்ட செக் பண்ணிட்டு தான் சாப்பிடணும் ஓகே வா?”
ஆனா மம்மி வீட்ல இருக்க மாட்டாங்களே.. எனக்கு பசிக்குமே..” என்றாள் அப்பாவியாக குழந்தை.
டாக்டர் என்ன சொல்லுவது என்று தெரியாமல் எங்களை அர்த்தமாய் பார்த்துவிட்டு இன்னும் டூ அவர்ஸ்ல வீட்டுக்கு கூட்டிட்டு போங்கஎன்றபடி அங்கிருந்து நகர்ந்தார்.
காரில் மீனுகுட்டி சிந்துவை இறுக கட்டிக் கொண்டு வந்தாள்.
சிந்து நமக்கு லோன் இன்னும் எவ்வளவு வருஷம் இருக்கு?”
இன்னும் எய்ட் இயர்ஸ் , ஏன் கேட்குறீங்க?”
ம்ச்.. நீ வேலையை விட்டுடு ..நான் பார்த்துக்கிறேன்..”
குழந்தைனா பிரச்சனை வர தான் செய்யும் அதுக்காக, வேலையை விடனுமா?ஏன் இப்பிடி பேசுறீங்க? எல்லாம் அவ மேனேஜ் பண்ணிக்குவா
அரை தூக்கத்தில் மீனுகுட்டி எழுந்துடாடீ..ஃபிஷ்குட்டிக்கு எல்லாம் நான் கரெக்டா ஃபீடு பண்ணுவேன்.. ஃபிஷ் டேங்க் வாங்கி தர்றீங்களா?” என்றாள்.
நான் சிந்துவை பார்த்தேன். “நீ தூங்குடா குட்டி.. நாம நாளைக்கு போய் வாங்கிட்டு வரலாம்என்றபடி காரை செலுத்தினேன்.
ம்ஹூம்..எனக்கு நீ வேலைக்கு போகிறது பிரச்சனை இல்ல சிந்து..மீனு..அவ இன்னும் வளரலை..அவளுக்கு நீ வேணும்..நமக்கு மீனுகுட்டி கண்டிப்பா வேணும்..எவ்வளவு பிரச்சனை வந்தாலும் சரி நான் பார்த்துக்கிறேன்.. நீ என்ன பண்ணனுமோ அதை செய்.” என்றேன்.
சிந்து எதுவும் பேசாமல் வேடிக்கை பார்த்து வந்தாள். நிறைய மௌனத்தோடும் யோசனையோடும் அந்த இரவு கரைந்து போனது.
காலை, “எனக்கு ஆடிட் நடக்குது..அதனால நான் கண்டிப்பா போகணும்..நீங்க இன்னிக்கு லீவு போட்டுடுங்கஎன்றவள் விறுவிறுவென காலை மற்றும் மதிய சமையலை செய்து டேபிளில் வைத்துவிட்டு ஆபீஸ்க்கு கிளம்பிச் சென்றாள்.
அன்று முழுதும் மீனு குட்டி நிறைய பேசினாள்.மதியம் சாப்பிட்டுவிட்டு குட்டி தூக்கம் போட்டு, எழுந்து சென்று போய் நானும் மீனுவும் ஃபிஷ் டேங்க் வாங்கி வந்தோம்.அவ்வளவு உன்னிப்பாக மீன் பராமறிப்பு பற்றி கடையில் கேட்டுக் கொண்டாள்.
வாட்ச்மேனின் உதவியுடன் ஃபிஷ் டேங்கை செட் செய்து, மீன்களை உள்ளே விட்டோம்.மீன் குட்டிகளை பார்த்த என் மீனு குட்டி துள்ளி குதித்தாள்.
ஹேய்டாடீ நான் பீட் பண்ணுறேன்..ஹேய்என்று குதித்து கொண்டு மீன்களுக்கு இறையிட்டாள்.
இரவு ஏழரை மணி இருக்கும், சிந்து ஓய்ந்து போய் வீடு வந்து சேர்ந்தாள்.
இந்தா சிந்து ப்ரெட் டோஸ்ட்..” என்றேன்.
..நீங்களே பண்ணுணீங்களா?” என்றவள் அப்போது தான் ஃபிஷ் டேங்கை பார்த்தாள்.
ஹய்..ஃபிஷ் டேங்க்..அதுக்குள்ள வாங்கிட்டீங்கஎன்றபடி சற்று நேரம் அதன் அருகில் அமர்ந்து பார்த்து கொண்டிருந்தவளின் முகம் மலர ஆரம்பித்தது.
சற்று நேரத்தில்மீனு..ஃபிஷ்கெல்லாம் புட் குடுத்தீயா?” என்றாள் மீனுவை பார்த்து.
ம்ம்.. ”என்று குதித்து கொண்டே வந்த மீனு வரிசையாக அவள் மீன்களுக்கு வைத்த பெயர்களை சொல்ல ஆரம்பிக்கவும் அம்மாவும் மகளும் சற்று நேரம் குழந்தைகள் போலவே பேசிக் கொண்டிருந்தனர்.
இரவு டின்னர் முடிந்தபிறகு, மீனு என் தோளில் தூங்கி கொண்டிருந்தாள். சிந்து மெதுவாகஇந்த ஒரு மாசம் கொஞ்சம் பார்த்துக்கோங்க..நான் இன்னிக்கு பேப்பர் போட்டுட்டேன்..ஒரு மாசத்திலே ரிலிவ் பண்ணுறதா சொல்லிருக்காங்கஎன்றாள்.
ஒண்ணும் சொல்லலையா
ம்..சொன்னாங்க..எனக்கு ஒரு விஷயம் மட்டும் தான் மனசுல இருந்துச்சு..மீனுகுட்டி நமக்கு கண்டிப்பா வேணும். அதான்என்று நிறைவாக சிரித்தாள் சிந்து.

No comments:

Post a Comment